இலங்­கை­யு­ட­னான சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­த­மொன்றில் கைச்­சாத்­திட எதிர்­பார்த்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள தாய்­லாந்து அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தில் அதற்­காக சிறப்பு அனு­மதி பெற்­றுக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.

இது குறித்து தாய்­லாந்தின் வர்த்­தக செயற்­பாட்டு பிரிவின் நிறை­வேற்று இயக்­குநர் ஒரமன் சப்­த­வீதும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்­கையை தாய்­லாந்­து­ட­னான தெற்­கா­சி­யாவின் வர்த்­தக பங்­கா­ளி­யாக மாற்றும் நோக்கில் இலங்­கை­யுடன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­த­மொன்றை கைச்­சாத்­திட எதிர்­பார்த்­துள்ளோம்.

இலங்­கை­யா­னது தெற்­கா­சி­யாவில்  குறிப்­பி­டத்­தக்­க­ளவு சந்தை வாய்ப்­ைப கொண்­டுள்­ளது. அத்­தோடு கடந்த ஐந்து வரு­ட­கா­லப்­ப­கு­தியில் சரா­ச­ரி­யாக 6.5 சத­வீதம் என்ற ஆரோக்­கி­ய­மான பொரு­ளா­தார வளர்ச்­சி­ைய பதிவு செய்­துள்­ளது.  இந்­தியா, பாகிஸ்தான் போன்ற தெற்­கா­சிய நாடு­க­ளுடன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்­ளது.

தாய்­லாந்தின் வர்த்­தக செயற்­பாட்டு பிரிவின் வல்­லு­நர்கள் இலங்­கை­யு­ட­னான சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம் தொடர்பில் முழு­மை­யான ஆய்­ைவ நிறை­வு­செய்­துள்­ளனர். ஆனாலும் இலங்­கை­யுடன் இவ்­ ஒப்­பந்தம் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முன்னர் பாராளுமன்றத்தின் அனுமதிைய பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.