நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு.!

243 0

யாழ்ப்­பா­ணத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஒன்­று­விட்ட முறை­யான சகோ­தரி ஒரு­வரை இரண்டு முறை பாலியல் வன்­பு­ணர்வு செய்து அப் பெண்ணை தாய்மைய­டையச் செய்த சகோ­த­ர­னுக்கு 10 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்தண்­டனை விதித்து யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

குறித்த வழக்கில் எதி­ரி­யாக பாதிக்­கப்­பட்ட பெண்ணின் ஒன்­று­விட்ட சகோ­த­ர­னது பெயர் குறிப்­பி­டப்­பட்டு சட்­டமா அதி­பரால் அந்நப­ருக்கு எதி­ராக யாழ்.மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந் நிலையில் அவ் வழக்கு விசா­ர­ணை­களை அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந் நெறிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இதன்­படி அந்த வழக்கு விசா­ர­ணை­களின் ஊடாக குறித்த ஒன்­று­விட்ட சகோ­த­ரனே அப் பதி­னாறு வய­திற்கு குறைந்த தனது சிறி­ய­தாயின் மகளை இரண்டு முறை பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்தி அவரை தாய்­மை­ய­டையச் செய்­தமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து நேற்­றைய தினம் இவ் வழக்கின் தீர்ப்­பா­னது யாழ்.மேல் நீதி­மன் றில் அறி­விக்­கப்­பட்­டது.

இதன்­படி குறித்த நப­ருக்கு பத்­தாண்­டுகள் கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும், கட்டத் தவறின் 2 மாத கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் அத்­துடன் இரண்டு இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் அதனை கட்டத்தவறின் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

Leave a comment