18 ஆண்டுகளுக்கு முன் நவாஸ் ஷெரிப்பின் சொத்துமதிப்பு ரூ.5.8 கோடி

224 0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5.8 கோடிக்கு சொத்து இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5.8 கோடிக்கு சொத்து இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பான ஊழலை பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். லண்டனில் சொத்துகள் வாங்கி குவித்தது தொடர்பாக நவாஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது கடந்த செப்டம்பர் 8-ம் தேதி மேலும் 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பே நவாஸ் ஷெரீப்பின் சொத்து மதிப்பு ரூ.5.8 கோடி இருந்ததாக இவ்வழக்குகளை விசாரித்து வரும் பொறுப்புடமை நீதிமன்றத்தில் ஊழல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 2000-01 ம் ஆண்டு செலுத்தப்பட்ட வருமான வரியின் அடிப்படையில் ஷெரிப்புக்கு அந்த காலக்கட்டத்தில் ரூ.5 கோடியே 9 லட்சத்து 40 ஆயிரத்து 870 மதிப்புள்ள சொத்துகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Leave a comment