ஈராக்கில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த துருக்கி பெண்ணுக்கு தூக்குத்தண்டனை

203 0

ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த துருக்கி நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள ஒரு பெண்ணுக்கு தூக்குத் தண்டனை விதித்து ஈராக் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது.

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளை ஈராக் ராணுவம் கைப்பற்றியபோது, அந்த இயக்கத்தில் இணைந்து ராணுவத்துக்கு எதிராக சண்டையில் ஈடுபட்ட ஏராளமான பெண்கள் பிடிபட்டனர். இவர்களில் 11 பேர் துருக்கி மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் மீது பாக்தாத் நகரில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் துருக்கி நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள ஒரு பெண்ணுக்கு தூக்குத் தண்டனை விதித்து கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது. மேலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 10 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் மேல் முறையீடு செய்ய இயலும் என்று பாக்தாத் குற்றவியல் கோர்ட்டு செய்தி தொடர்பாளர் விடுத்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave a comment