மாண்டரினை ஆட்சிமொழியாக்க பாகிஸ்தான் செனட் சபை ஒப்புதல்

224 0

பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக மாண்டரினை அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு அந்நாட்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. 

பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக மாண்டரினை அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு அந்நாட்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் ஆட்சிமொழியாக உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் உள்ளன. இந்நிலையில், சீன மொழியான  மாண்டரினை பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக அங்கீகரிப்பதற்கான தீர்மானம் அந்நாட்டின் செனட் சபையில் நேற்று கொண்டுவரப்பட்டது.

இதற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் உருது, ஆங்கிலத்தை தொடர்ந்து மாண்டரினும் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக உள்ளது. மாண்டரின் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாவதன் மூலம் இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான உறவு மேலும் ஆழமடைந்து, பொருளாதார வளர்ச்சி மேம்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது, “கடந்த 70 ஆண்டுகளில், பாகிஸ்தான் மக்களுடைய தாய் மொழியாக இல்லாத நான்கு மொழிகளுக்கு ஊக்கமளித்துள்ளது – ஆங்கிலம், உருது, அரபிக் மற்றும் இப்போது மாண்டரின் – சொந்த மொழிகளை தவிர்த்து”.

பாகிஸ்தானில் பரவலாக பேசப்படும் பஞ்சாபி, பாஷ்டோ மற்றும் பிற வட்டார மொழிகள் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment