தலங்கம பிரதேசத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில் கதவை உடைத்துக் கொண்டு வீட்டில் நுழைந்துள்ள இனந்தெரியாத ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு, தப்பிச் சென்றுள்ளார்.
தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

