தாஜுதீன் கொலை : இந்த 0773554441இலக்கம் யாருடையது? நீதிமன்றம் விளக்கம் கோரல்

202 0

ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அவரது தொலைபேசிக்கு வந்த “மிஸ்கோள்” அழைப்பு தொடர்பில் விளக்க அறிக்கையொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பெற்றுக் கொடுக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் சாந்தனி டயஸ் டயலொக் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2012 மே மாதம் 17 ஆம் திகதி 12.32 மணிக்கு கொலைசெய்யப்பட்ட தாஜுதீனின் தொலைபேசிக்கு 0773554441 எனும் இலக்கத்திலிருந்து மிஸ்கோள் ஒன்று வந்துள்ளது.

இதற்கு முன்னர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம் தொடர்பான விளக்க அறிக்கையில் இந்த இலக்கம் காணப்படாதிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment