மைத்­திரி தலை­மை­யி­லான கூட்டு அரசு அடுத்த வெசாக் போயா தினத்துக்குள் முற்­றுப்­பெ­றும்!

252 0

சிறிலங்கா ஜனாதிபதி மைத்­திரி தலை­மை­யி­லான கூட்டு அரசு அடுத்த வெசாக் போயா தினத்துக்குள் முற்­றுப்­பெ­றும் என்று முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

மஹ­ர­க­ம­வில் உள்ள விகா­ரை­யில் காலஞ்­சென்ற பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேர­ரின் நினை­வு­தான நிகழ்வு நடை­பெற்ற போது அதில் கலந்து கொண்ட பின்­னர், சம­கால அர­சி­யல் நிலமை தொடர்­பில் ஊட­கங்­க­ளுக்குக் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்த அர­சின் ஆயுள் இன்­னும் இரண்டு ஆண்­டு­கள் இல்லை. அடுத்த ஆண்டுடன் நல்­லாட்­சி­யின் ஆயுள் நிறை­வ­டை­கி­றது. 500 நாள்­க­ளா­கின்­றன. இன்­னும் இருப்­பது சொற்ப நாட்­க­ளே­யா­கும். இன்­னும் ஒரு வெசாக் போயா தினமே இருக்­கி­றது. நாங்­கள் பல சேவை­களைச் செய்­தி­ருக்­கின்­றோம்.

நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருக்­கின்­றோம். போரை முடி­வு­றுத்­தி­ய­தன் விளை­வா­கவே விகா­ரை­க­ளுக்குப் பக்­தர்­கள் வர முடி­கி­றது.

தமிழ் மக்­க­ளும், முஸ்­லிம் மக்­க­ளும் சுதந்­தி­ர­மாக செயற்­ப­ட­வும், எமக்கு விரோ­த­மாகவேனும் சரி வாக்­க­ளிப்­ப­தற்­கும் பலம் கிடைத்­தி­ருப்­பது விடு­த­லைப் புலி­களை ஆயுத ரீதி­யில் தோற்­க­டித்­த­மை­யி­லா­கும். அப்­ப­டி­யான போரை முடி­வு­றுத்தி அனைத்துத் துறை­க­ளை­யும் அபி­வி­ருத்தி செய்­தது எமது அர­சா­கும்.

நல்­லாட்சி அர­சின் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக மக்­கள் அளித்த ஆணையை மதித்து, புரிந்து கொள்­வதை விட­வும் 113 உறுப்­பி­னர்­களை ஏற்­ப­டுத்தி அரசை அமைப்­பது குறித்து அரசு சிந்­திக்­கக்­கூ­டாது.

அதுவே மகா­நா­யக்க தேரர்­க­ள­தும் கருத்­தா­கும். கர்­தி­னால் ரஞ்­ஜித் ஆண்­ட­கை­யும், லிப­ரல் இன­வா­தத்தை நோக்­கிச்­செல்­லும் அரசு குறித்து அண்­மை­யில் விளங் கப்­ப­டுத்­தி­னார். இவற்­றுக்கு எதி­ராக மக்­கள் அளித்த வாக்கு குறித்து அரசு சிந்­திக்க வேண்­டும். மாறாக 113 உறுப்­பி­னர்­களை ஏற்­ப­டுத்தி அர­சை அமைப்­பது முக்­கி­ய­மல்ல

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

நாராஹேன்பிட்ட, அபயராம விசாரையில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களிடம் பேசினார். இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது மேலும் ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட அவர்,

இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சி கூறுவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போது,

ஐக்கிய தேசிய கட்சி மற்றும்ஸ் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டு தரப்பினரும் இதனையே கூறுகின்றனர். எனினும் இறுதி முடிவு இருப்பது ஜனாதிபதியின் கையில். அடுத்த முடிவு இருப்பது எமது கையில். முதலில் ஜனாதிபதி முடிவெடுக்கட்டும். அடுத்து நாங்கள் எடுப்போம் என்றார்.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுமானால் அமைச்சரவையை கண்டிப்பாக 30 பேர் வரை வரையறுக்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்.

Leave a comment