மைத்திரி மஹிந்தவுக்கு அழைப்பு

291 0

அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழைப்பு விடுத்ததாகவும், நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை முடிவடைந்ததன் பின்னர் ஜனாதிபதியை சந்திப்பதாக தான் பதிலளித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் ஒன்று கூடிய போது மஹிந்த ராஜபக்ஷ இந்த அறிவித்தலை அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எழுந்துள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து தீர்மானம் எடுப்பதற்காக இந்த சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.

Leave a comment