கேரள கஞ்சாவுடன் கணவன், மனைவி உட்பட மூவர் கைது

281 0

வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் 4 கிலோ கேரள கஞ்சாவுடுன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிசார்  மூவரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 4 கிலோ கேரளா கஞ்சாவினையும் 10 மில்லி கிராம் ஹெரோயினையும் மீட்டுள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,

வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு திடீரென சென்ற பொலிசார், அங்கு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டபோது கணவன் மனைவி மற்றும் இவர்களுடைய நண்பரான மூவரையும் இன்று முற்பகல் 11 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 4 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 10 மில்லி கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணை மேற்கொண்ட பின்னர் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment