ஆட்கடத்தல் தொடர்பில் ஆராயும் அவுஸ்திரேலிய தூதுவர் – கடற்படை பிரதானி சந்திப்பு

328 0

ஆட்கடத்தல் தொடர்பில் ஆராயும் அவுஸ்திரலிய தூதுவர் பேராசிரியர் ஜெப்ரி ஷோ மற்றும் கடற்படை தலைமையகத்தின் கடற்படைகளின் பிரதானி ரியல் அட்மிரல் நீல் ரோசைய்ரோ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் கடல் வழியாக நடைபெறும் இடப்பெயர்ச்சி, ஆட்கடத்தல், போதைப்பொருள் பரிமாற்றம், எல்லை மீறிய மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள மேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இச்சந்திப்பில் கடற்படையின் நிறைவேற்று பணிப்பாளர் ரியல் அட்மிரல் பியல் டி சில்வா, இலங்கை கடற்கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ரியல் அட்மிரல் சமந்த விமலதுங்க, கடற்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கப்டன் சஞ்சீவ பிரேமரத்ன உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment