ஜீ. எல். பீரிஸின் அறிக்கைக்கு ஞானசார தேரர் பதில்

313 0

“முஸ்லிம் மக்களை ஏமாற்ற மற்றுமொரு முயற்சி” என குறிப்பிட்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பு பதிலளித்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.

குறித்த ஊடக அறிக்கை எந்த அடிப்படையும் அற்றது என பொதுபல சேனா அமைப்பின் செயலர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இந்த ஊடக அறிக்கையானது உண்மைக்கு புறம்பான விடயங்களை அடிப்படையாக கொண்டது எனவும், நம்பக்கூட முடியாத விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஞானசார தேரர், பொதுபல சேனா எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை என தெரிவித்தார்.

Leave a comment