இராணுவ வீரர்களின் நன்மைக்கருதி உருவாக்கப்பட்டுள்ள 1985ம் ஆண்டு 09ம் இலக்க தேசிய பாதுகாப்பு நிதிச்சட்டத்தினை மேலும் நன்மைப்பயக்கும் வகையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதனடிப்படையில், தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

