பொலன்னறுவையில் பிராந்திய கொன்சியுலர் அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொலன்னறுவையில் வாழும் மக்களின் நலன்கருதி பிரதேச கொன்சியுலர் அலுவலகத்தை பொலன்னறுவை தமன்கடுவை பிரதேச செயலகத்துக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

