2018ம் ஆண்டு பல்கலைக்கழங்களுக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்களின் நன்மைக்கருதி பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதுடன் மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் கற்கை நெறிகளுக்கு பொருத்தமான வகையில் பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக வரவுசெலவுத்திட்டத்தில் மானியம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி இந்த மானியங்களை பயன்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா பீடத்தில் நூல்நிலையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையத்திற்காக 2 மாடி கட்டடத்தை நிர்மாணித்தல், றுஹுணு பல்கலைக்கழக்கதில் தொழில்நுட்ப பீடத்திற்காக 3 மாடிக்கட்டட விரிவுரை மண்டபம், அநுராதபுரம் இலங்கை பௌத்தமதகுரு பல்கலைக்கழகத்தில் உத்தியோகபூர்வ தங்குமிட வசதி அமைத்தல், களனி பல்கலைக்கழகத்தில் பாலி மற்றும் பௌத்த கல்வி பட்டப்படிப்பிற்காக 4 மாடி கட்டடம் ஒன்றை நிர்மாணித்தல்போன்ற நடவடிக்கைள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

