2200 இலங்கையர்கள் ஜப்பானில் கடந்த ஆண்டு புகலிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானிய நீதி அமைச்சினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடம் கோரிய 19628 பேரில் 20 பேருக்கு மட்டுமே ஜப்பானிய அரசாங்கம் இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ளனர்.
எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிலிருந்தே அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.

