அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி மற்றும் ரக்னா லங்கா தலைவர் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர் குணசிங்க மூலம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 19ம் திகதி வரை குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெய்வல்லுனர் விளையாட்டு சங்கத்தின் நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக பாலித பெர்னாண்டோவும் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக நிஷ்ஷங்க சேனாதிபதியும் வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதாக கூறி அவர்கள் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாறப்பனவின் வேண்டுகோளை பரிசீலனை செய்ததன் பின்னர் நீதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

