நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளர்

2 0

உள்ளூராட்சி சபை தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட கூட்டு எதிரணி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளர் என முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்தார்.

11 உள்ளூராட்சி சபைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கைப்பற்றிக் கொண்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடாகவியலாளர் சந்திப்பு ஒன்று நுவரெலியாவில் இன்று (13) இடம்பெற்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த வெற்றியை தமக்கு ஈட்டி தந்த மக்களுக்கு நாம் நன்றியை தெரிவிக்கின்றோம். கடந்த மூன்று வருடங்களில் நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய எந்த ஒரு உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை. அதனாலேயே மக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

நுவரெலியாவில் ஆட்சியை அமைப்பதற்கு எம்மிடம் பெரும்பான்மை இல்லாத போதிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளது. நாங்கள் இருவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட்டோம்.

தற்போது நாங்கள் எதிர்கட்சி வரிசையிலேயே அமர்ந்துள்ளோம். அதனால் நாங்கள் இணைவதில் ஆச்சரியம் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமாகாத ஒன்று. அதனால் இ.தொ.காவை இணைத்துக்கொண்டோம்.

எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் கிடையாது. எங்களுக்கென்று தனிப்பட்ட இலக்கு ஒன்று இருக்கின்றது. அந்த இலக்கை நோக்கியே நாம் பயணிக்கின்றோம்.

அதேபோல மாகாண சபை தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோல் எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தலிலும் கூட்டு எதரணி வெற்றிபெறும் என்றார்.

Related Post

முலையக தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்துக்கு முன்னதாக நிர்வாக அதிகாரம் வேண்டும் – திலகர்

Posted by - May 26, 2017 0
மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரத்துக்கு முன்னதாக நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.…

சனசமூக நிலையத்தின் மீது தாக்குதல்

Posted by - December 19, 2016 0
கொக்குவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையம் ஒன்றின்மீது மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள இச்…

03 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

Posted by - March 20, 2018 0
ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர்

Posted by - February 25, 2018 0
அரச முகா­மைத்­துவ சேவையில் மேலும் ஆறா­யிரம் பேரை இணைத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக அரச நிர்­வாக அமைச்சின் ஒன்­றி­ணைந்த சேவை பணிப்­பாளர் நாயகம் திரு­மதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரி­வித்தார்.

அனர்த்த நிலமை தொடர்பில் 24 மணி நேரமும் அறிந்து கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்

Posted by - May 26, 2017 0
அனர்த்த நிலைமைகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் அறிந்து கொள்வதற்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் பெறும் தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது. இதன்படி பின்வரும்…

Leave a comment

Your email address will not be published.