உண்ணாவிரதத்தை கைவிட்ட பாலித தெவரப்பெரும

2 0

தனது புதல்வனின் உடல்நல குறைவின் காரணமாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்ததாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார். 

தனது ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

புலத்சிங்ஹல நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு இன்றோடு 05 நாட்கள் ஆகின்றன.

எவ்வாறாயினும் தனது புதல்வனின் உடல்நல குறைவு காரணமாக இன்று மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்ததாக அவர் கூறினார்.

தற்போது அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Post

கட்சித் தலைவர் பதவிக்காக எவரும் முன்வரவில்லை-அகிலவிராஜ்

Posted by - April 28, 2018 0
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான எண்ணம் வேறு எவரிடத்திலும் இருக்கவில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். கட்சியின்…

நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள் ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

Posted by - October 10, 2018 0
இரு ரயில்கள் நேருக்க நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்தொன்று அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 16, 2017 0
வவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையத்தை, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று திறந்து வைத்தார். மத்திய…

புகையிரதங்களில் யாசகம் எடுப்பது இன்று முதல் தடை

Posted by - July 1, 2018 0
புகையிரதங்களில் யாசகம் எடுப்பதும், அநாவசியமாக நடமாடுவதும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. புகையிரத பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு இம்சைகள் மற்றும் பிரச்சனைகைள கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம்…

Leave a comment

Your email address will not be published.