தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாற்றுத் திட்டத்தை வௌிப்படுத்த வேண்டும்

2 0

மஹிந்த ராஜபக்‌ஷ தலமையிலான கட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்து என்ன செய்யபோகிறது? மாற்றுத் திட்டம் என்ன? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டும் என சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகள் குறித்து தீர்மானங்களை, தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைத்து தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கவேண்டும். வெறுமனே இரா. சம்பந்தனும், எம். ஏ.சுமந்திரனும் வார்த்தைகளால் கூறிக்கொண்டு இருப்பதால் பயனில்லை எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று காலை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மை வரித்து கொண்டிருத்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பலவீனப்பட்டிருக்கிறது. இம்முறை மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளார்கள். முன்னர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது.

வெருகல், பூநகரி போன்ற இடங்களை தவிர்த்து சகல இடங்களிலும் பெரும்பான்மையை இழந்துள்ளது. இதற்கிடையில் தமழ் தேசிய கூட்டமைப்பை தாபன மயப்படுத்த வேண்டும் என நாம் பல சந்தர்பங்களில் கேட்டிருந்தபோதும் அதனை தமிழரசு கட்சி நிராகரித்தது. இதனால் நாம் கட்சியை விட்டு வெளியேறி தனித்து இயங்கும் தீர்மானத்தை எடுத்தோம்.

மேலும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அணி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதனால் தெற்கில் ஆட்சி மாறுமா? என்னும் அளவுக்கு நிலமைகள் மாறியிருக்கிறது. இந்நிலையில் இப்படியான மாற்றம் வந்தால் என்ன செய்வதைன தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் திட்டம் ஒன்று இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும்.

அதனடிப்படையில் அடுத்தகட்ட நகர்வு என்ன? என்பது தொடர்பில் தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும். இதற்கு தமிழரசு கட்சியிடம் கொள்கை மற்றும் உபாய மாற்றம் வேண்டும். இதனை விடுத்து இரா. சம்மந்தனும், சுமந்திரனும் வாயால் கருத்துக்களை கூறிக்கொண்டிருப்பதால் பயன் எதுவுமில்லை என்றார்.

Related Post

புதிய கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி சசிதரன்

Posted by - October 16, 2018 0
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மிக விரைவில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பாக கடந்த வடமாகாண…

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் தந்தை இயற்கை எய்தினார்

Posted by - April 30, 2017 0
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் தந்தையார் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 80 வயதான முத்தையா சிவப்பிரகாசம் சுகயீனமுற்றிருந்த…

கிளிநொச்சியில் மூன்று இலட்சம் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - January 1, 2017 0
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மூன்று இலட்சத்து 401 வரையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக கண்ணிவெடிசெயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வுகள் மேற்கொள்ளும் பொருட்டு வெடி…

திருகோணமலையில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - May 2, 2018 0
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 500கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்போபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய…

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா[படங்கள் இணைப்பு]

Posted by - October 5, 2017 0
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா இன்று 05-10-2017 மாலை மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ய.அனிருத்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்…

Leave a comment

Your email address will not be published.