கந்தபளை தேயிலை தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு!

2 0

கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை மலை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் போர் மலை பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் இன்று கந்தபளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கந்தபளை நோனா தோட்டத்தைச் சேர்ந்த 70 வயதான நடராஜ் கணேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாடுகளை தரகர் முறையில் விற்பனை செய்து வந்துள்ள இவர்  நீண்ட காலமாக தொழிலை விடுத்து வாழ்க்கைக்கு வருமானம் இல்லாத நிலையில் தனது மகனின் அரைவணைப்பில் வாழ்ந்த இவருக்கு உணவு மற்றும் இதர சலுகைகள் கிடைக்காத காரணத்தினால் மனவிரக்கத்தி அடைந்துள்ளார்.

இந் நிலையில் நேற்று  மாலை வீட்டை விட்டு வெளியேறிய குறித்த நபர் இன்று காலை போர் மலை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தூக்கிட்ட நிலையில் இருந்ததை அப்பகுதிக்கு வழமையாக தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் சிலர் கண்டுள்ளனர்.

தொழிலாளர்கள் கந்தபளை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் இன்று பிற்பகல் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு  பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை செய்து வருவதாகவும் கந்தபளை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Post

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு

Posted by - October 1, 2017 0
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் வைத்து பிரதமர் இதனை தெரிவித்தார்.…

சமுதாயத்தைப் பாதுகாப்பதற்காகவே கட்சி தவிர தலைமைத்துவத்தைப் பாதுகாக்க அல்ல – ரிசாத்

Posted by - March 5, 2017 0
சமுதாயத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கட்சி தேவைப்படுகின்றதே தவிர தலைமைத்துவத்தைப் பாதுகாக்க ஒரு கட்சி தேவையில்லை என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட செயலமர்வொன்றில்…

எல்பிடிய தீ – இடைக்கால அறிக்கை கோரல்

Posted by - August 31, 2017 0
எல்பிடிய – குருந்துகஹாஹெதெக்ம உப அஞ்சல் நிலைய அதிபரின் மரணம் தொடர்பாகவும் திணைக்களத்திற்கு சொந்தமான ஆவணங்கள் தீயினால் அழிவடைந்தமை தொடர்பாகவும் இடைக்கால அறிக்கை கோரப்பட்டுள்ளது. அஞ்சல் திணைக்களம்…

இன்று இலங்கை வரவுள்ளார்- பப்லோ டி கிரீப்

Posted by - October 10, 2017 0
ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பான விசேட அறிக்கையாளர்,  பப்லோ டி கிரீப் இன்று இலங்கை வரவுள்ளார். இன்று…

Leave a comment

Your email address will not be published.