கிதுல்கல, பிபிலிஓய பிரதேசத்தில் பஸ்ஸின் மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்ததால் அதே பஸ்ஸில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாவது தடவையாக தனது வாக்குப் பதிவை மேற்கொள்ளும் நோக்கில் சென்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்த லக்ஷித தேனுக பெரேரா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

