தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையத்தின் செயற்பாடு ஆரம்பம்

441 0

இன்று இடம்பெறுகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் சம்பந்தமாக அறிவிப்பதற்கு தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டு விசாரணை நிலையம் இள்றுக் காலை 6 மணி தொடக்கம் இயங்க ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

இன்று சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகளையும் கருத்துக்களையும் விசாரித்தறிந்து உரிய நடவடிக்கை எடுப்பது நிலையத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு மாகாணங்களுக்காகவும் பிரத்தியேக தொலைபேசி மற்றும் தொலைநகல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி தேர்தல் சம்பந்தமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் குறித்து அறிவிப்பதற்காக அந்தந்த மாகாணங்களுக்கான தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்களை இங்கே காணலாம்.

மேல் மாகாணம் – தொலைபேசி இல. 011-2866448 தொலைநகல் இல.011-2866387

கிழக்கு மாகாணம் – தொலைபேசி இல. 011-2866470 தொலைநகல் இல. 011-2866396

மத்திய மாகாணம் – தொலைபேசி இல. 011-2866478 தொலைநகல் இல. 011-2866401

வடக்கு மாகாணம் – தொலைபேசி இல. 011-2866492 தொலைநகல் இல. 011-2866408

தென் மாகாணம் – தொலைபேசி இல. 011-2866493 தொலைநகல் இல. 011-2866410

வட மத்திய மாகாணம் – தொலைபேசி இல. 011-2866495 தொலைநகல் இல. 011-2866421

வடமேல் மாகாணம் – தொலைபேசி இல. 011-2866496 தொலைநகல் இல. 011-2866423

சப்பிரகமுவ மாகாணம் – தொலைபேசி இல. 011-2866498 தொலைநகல் இல. 011-2866428

ஊவா மாகாணம் – தொலைபேசி இல.011-2866504 தொலைநகல் இல. 011-2866434

மேலதிக தொலைபேசி இலக்கம் – 011-2866529 தொலைநகல் இலக்கம் – 011-2866446

Leave a comment