தேர்தல் கண்­கா­ணிப்பில் 7 ஆயிரம் அதி­கா­ரிகள்

451 0

நாட்டில் இன்று நடை­பெ­ற­வுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான  சுயா­தீன கண்­கா­ணிப்பு பணி­களில் உள்ளூர் மற்றும் வெளி­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்­கள் கட­மையில் ஈடு­ப­டுத்தப்பட்டுள்ளனர். நாடு முழு­வதும் கண்­கா­ணிப்பு பணி­க­ளுக்­காக 7 ஆயிரம் தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் இலங்கை வந்­துள்ள   சர்­வதே கண்­கா­ணிப்புக் குழுவினரும் பல்­வேறு ஆய்வு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.

நடைபெறும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முதல் தட­வை­யாக கலப்பு முறை­மையில் இடம்­பெ­ட­வுள்ள நிலையில் இவற்றை கண்­கா­ணிக்கும் வகை­யிலும், புதிய முறை­மையின் சாதக தன்­மைகள் குறித்து ஆரா­யவும் சர்­வ­தேச ஆய்­வுக்­கு­ழு­வினர் நேற்று முன்­தினம் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்­தனர்.

இந்­தோ­னே­சி­யாவின் இரண்டு ஆய்வு அதி­கா­ரி­களும், கொரி­யாவின் இரண்டு ஆய்வு அதி­கா­ரி­களும், மாலை­தீவில் இருந்து இரண்டு அதி­கா­ரி­களும், இந்­தி­யாவில் இருந்து நான்கு ஆய்வு அதி­கா­ரி­களும் இவ்­வாறு இலங்­கைக்கு விஜயம் செய்­துள்­ளனர். இவர்கள் நேற்று நாட்டின் அதி­க­ள­வி­லான பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்து தமது ஆய்வு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

அதேபோல்  தேர்தல் கட­மை­க­ளுக்­காக கொழும்­பி­லி­ருந்து 400 அதி­கா­ரி­களைக் கொண்ட விசேட குழு­வினர்  சர்­வ­தேச ஆய்வு பிர­தி­நி­தி­க­ளுடன் இணைந்து நாட்டின் பல பகு­தி­க­ளுக்கும் பய­ணிக்­க­வுள்­ளனர்.  தேர்­தலில் வாக்­குப்­ப­திவு நிலை­யங்­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்­காக இந்த அதி­கா­ரிகள் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

இதில் சுயா­தீன தேர்தல் குழுக்­களும் பங்­கு­கொள்­ள­வுள்­ளது. தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் அழைப்­புக்கு அமைய அவர்கள் இலங்­கைக்கு வந்­துள்ள நிலையில்  இவர்கள் தேர்தல் தொடர்பில் தயா­ரித்த அறிக்­கையை எதிர்­வரும் 11 ஆம் திகதி தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விடம் கைய­ளிக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது இவ்­வாறு இருக்க இலங்­கையில் சுயா­தீன கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க 7 ஆயிரம் பணி­யா­ளர்கள் நாட­ளா­விய ரீதியில் தேர்தல் கண்­கா­ணிப்பு பணி­களில் ஈடு­ப­ட­வுள்­ளனர். சுயா­தீன தேர்தல் கண்­கா­ணிப்பு அமைப்­புகள் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் ஆகி­யன ஒன்­றி­ணைந்து இவ்­வாறு தேர்தல் கண்­கா­ணிப்பு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

Leave a comment