குருணாகல், தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் டிபர் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த பஸ்ஸில் பயணித்த 24 பேரும் டிபர் வாகனத்தின் சாரதியும் சிகிச்சைக்காக குருணாகல் மற்றும் பொல்கொல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுள் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

