தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: திருப்பதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு

2443 159

திருப்பதிக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் திருமலை நடைபாதை மார்க்கங்கள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் 1400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

திருப்பதிக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு படையினர் திருமலை மற்றும் திருப்பதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், திருப்பதியில் குழந்தை கடத்தல், வழிப்பறி செயின் பறிப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கவும், பக்தர்களுக்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கவும் தேவஸ்தானம், திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருமலை நடைபாதை மார்க்கங்கள் மாடவீதிகள், முக்கிய சந்திப்புகள், திருப்பதியில் உள்ள பல முக்கிய பகுதிகளில் 1400 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை 4 கட்டங்களாக பிரித்து அதிகாரிகள் பொருத்தி வருகின்றனர். முதல் கட்டமாக 256 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மொத்தம் ரூ.5 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதிக்குள், முதல்கட்ட பணிகள் முடிவு பெற உள்ளது.

விரைவில் 4 கட்டப் பணிகளும் நிறைவு பெற்று, வரும் ஜுன் மாத இறுதிக்குள் முழுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் திருமலை மற்றும் திருப்பதி கொண்டு வரப்பட உள்ளது.

Leave a comment