முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி

523 0

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் ஜாஎல, குடெல்ல சந்தியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்ததால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நபர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment