முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் தொடரப்பட்டிருக்கும் வழக்கை மீளப்பரிசீலனை செய்யுமாறு கெஹெலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கின் குற்றப் பத்திரிகையில் திருத்தம் மேற்கொள்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியதை மீளப்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் நீதவானின் உத்தரவு சட்டரீதியானது எனவும் தெரிவித்து குறித்த மனு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது

