தேர்தலின் பின்னர் பிரதமரும் ஜனாதிபதியும் ஒன்றிணைவர்

326 0

தேர்தல் காலங்களில் வெவ்வேறு கருத்துக்களை கூறினாலும் பெப்ரவரி 10ம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைவார்கள் என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

யடிநுவர பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யும் நோக்கில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் காலங்களில் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி ஆதளவாளர்கள் குழப்பமடைய வேண்டிய தேவை இல்லை எனவும் சுதந்திர கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வெவ்வேறாக தேர்தலில் போட்டியிடுவதாகவும் தாமும் வேறாக போட்டியிடுவதன் காரணமாக அவர்களது வாக்குகளை அதிகரிக்கும் நோக்கில் கூறப்படும் விடயங்களுக்கு எமது ஆதரவாளர்கள் பயப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment