பிரதமர் 8ஆம் திகதி பாராளுமன்றை கூட்டினால், தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்

4104 0

எதிர்வரும் 8ஆம் திகதி பிரதமர் பாராளுமன்றை கூட்டினால், உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் நிலைமை ஏற்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலே இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தினத்தில், பிரதமர் ஏதாவது ஒரு காரணத்துக்காக பாராளுமன்றை கூட்டினால், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்கு பிறகு வரும் வேறொரு தினத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு கவனம்செலுத்திவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment