பௌத்த விகாரையில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு

2752 0

சப்புகஸ்கந்த, ஹெய்யன்துடுவ தெவமித்த பௌத்த விகாரையின் தாது வாழிபாட்டு அறைக்கு அருகிலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த விகாரையின் விகாராதிபதியால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் சடலம் க்ணடெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை அந்த இடத்தில் மூன்று இளைஞர்கள் இருந்துள்ளதுடன், விகாராதிபதி அங்கு சென்ற சமயத்தில் இரண்டு பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

ஏனைய ஒருவர் அந்த இடத்தில் விழுந்து கிடந்ததை விகாராதிபதி அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment