அரச மதிப்பீட்டாளர்கள் சங்கம் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

271 0

அரச மதிப்பீட்டாளர்கள் சங்கம் இன்று (23) கொழும்பு கோட்டையில் உள்ள நிதி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.

அனுமதியளிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிதி அமைச்சோ திணைக்களமோ நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஆட்சிக்காலத்தில் மதிப்பீட்டாளர்களது குறைபாடுகள், சம்பள அதிகரிப்பு, பதவியுவா்வுகள் புதிய மதிப்பீட்டாளர்கள் ஆட் சேர்ப்பு பற்றி 2014.12.12ல் நிதியமைச்சின் ஊடக அமைச்சரவை பத்திரம் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மதிப்பிட்டு கடைமைகள், வேலைகளை அரசாங்கம் தனியார் கம்பணிகளுக்கு வழங்கி வருகின்றது. இதனால் நாட்டில் அரச சொத்துக்களுக்கு நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் நிகழ்கின்றன.. எனவும் ஆர்ப்பாட்டத்தின்போது அரச மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளா செனவிரத்தின தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் நிதியமைச்சிற்குள் செல்ல முட்பட்டபோது பொலிஸார் இரு மருங்கிலும் வீதிக் தடைகளை வைத்து தடுத்து நிறுத்தினாா்கள்

இதன்போது, அவர்களது மனு நிதி அமைச்சின் செயலாளரிடம் பொலிஸாரின் உதவியுடன் கையளிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் அரச மதிப்பீட்டாளர்கள் 350 பேருக்கு மேற்பட்டோர் மதிப்பீட்டுத் திணைக்களத்தில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment