யாழ் குடாநாட்டை வாட்டியெடுக்கும் குளிர்! பொதுமக்கள் அசௌகரியம்

243 0

யாழ்ப்பாணத்தில் தற்போது மாறுபட்ட காலநிலை நிலவி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வறட்சியான காலநிலைக்கு மத்தியில் அண்மைக்காலமாக அதிகளவான குளிரான காலநிலை நிலவி வருகிறது.

காலை மற்றும் இரவு நேரங்களில் ஐரோப்பிய நாடுகளை போன்று கடும் குளிரான காலநிலை நிலவுகின்றது.வழமையாக யாழ்ப்பாணத்தில் 35 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருகிறது. எனினும் அண்மைக்காலமாக காலை மற்றும் இரவு நேரங்களில் 22 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் மாறுபட்ட காலநிலை நிலவி வருகிறது.கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, ஆகிய மாவட்டங்களில் அதிகளவான குளிரான காலநிலை நிலவுகிறது. குறிப்பாக நுவரெலியாவில் உறைபனி கொட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment