களனி பெரஹராவை முன்னிட்டு சில வீதிகள் மூடப்படும்- பொலிஸார்

325 0

களனி ரஜமகாவிகாரையின் பெரஹராவை முன்னிட்டு மூன்று தினங்களுக்கு கொழும்பு – பியகம வீதி மற்றும் விகாரையை அண்டிய பகுதியின் குறிப்பிட்ட சில வீதிகள் என்பவற்றின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்றும் (20) எதிர்வரும் 23 ஆம் 27 ஆம் திகதியும் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த வீதி அடைப்பு அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

களனி சீமா மாலக வீதியிலிருந்து 4 ஆம் கட்ட முதல் பியகம கொழும்பு வீதி வரையும், தொரண சந்தி தொடக்கம் வராகொட சந்தி வரையிலும் வீதிகள் மூடப்படவுள்ளன. இச்சந்தர்ப்பங்களில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பயணிகளைப் பொலிஸார் கேட்டுள்ளனர்.

Leave a comment