சுதுமலை முருகமூர்த்தி ஆலயத்தில் கோமாதா பூஜை(காணொளி)

421 0

யாழ்ப்பாணம் சுதுமலை முருகமூர்த்தி ஆலயத்தில் கோமாதா பூஜை இன்று இடம்பெற்றது.

கோவிலை அண்டிய கிராமத்திலுள்ள பசுக்கள் ஆலய முன்றலுக்கு கொண்டுவரப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது.

தைப்பொங்கலிற்கு அடுத்த நாள் சைவ மக்களின் மரபுக்கேற்ப பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

வீடுகளில் மக்கள் பட்டிகள் கட்டப்படுகின்ற தொழுவங்களில் பட்டிப்பொங்கலை பொங்கி கொண்டாடுகின்றனர்.

பட்டிப்பொங்கல் தினமான இன்றையதினம் சுதுமலை முருகன் ஆலயத்தில் அருகிலுள்ள பசுக்கள் மக்களால் கொண்டுவரப்பட்டு பொங்கல் பொங்கி பசுக்களுக்கு மாலையிட்டு, பட்டுடை அணிவித்து கோமாதா வழிபாடு ஆலய குருக்களினால் நடாத்தப்பட்டது.

இதனையொட்டி ஆலயத்தின் முற்பகுதி நந்திக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு பட்டிப்பொங்கல் விழா நடாத்தப்பட்டது.

சதுமலை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற பட்டிப்பொங்கல் விழாவில் இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் உட்பட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Leave a comment