கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த ரயிலில் தீ

5532 0

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் தீப் பிடித்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.இன்று முற்பகல் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த குறித்த கடுகதி ரயிலின் இயந்திரப் பெட்டியில் தீ பரவியுள்ளது.

மீசாலை – சாவகச்சேரிப் பகுதியில் குறித்த ரயில் நிறுத்தப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ரயில் சாரதிகளும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர்.இயந்திரக் கோளாறு காரணமாகவே தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து ரயில் யாழ் நோக்கி மெதுவாக தீயணைப்பு படையின் பாதுகாப்புடன் நகர்ந்து செல்வதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a comment