நிலக்கண்ணி வெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி

312 0

jappanஇலங்கையின் வடக்கு பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு, ஜப்பான் சுமார் 6 லட்சத்து 7 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்கியுள்ளது.

ஜப்பானின் கீழ்மட்ட மனித பாதுகாப்புக்கான நன்கொடை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. என்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கண்ணிவெடியகற்றும் பணிகளை ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் முன்னெடுத்துவருகிறது.

இந்தநிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவதற்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஹல்லோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் கண்ணி வெடி அகற்றும் முயற்சிகள் உதவியாக அமையும் என்று ஜப்பானிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் மாத்திரம் ஹல்லோ ட்ரஸ்ட் நிறுவனத்தினால் 26 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 8 ஆயிரத்து 183 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் முகாமையாளர் ரொபட் சைபிரட் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், 800 குடும்பங்களை சேரந்த 6 ஆயிரத்து 645 பேரை மீள்குடியேற்றுவதற்கான சூழ்நிலை அமைத்து கொடுக்கப்பட்டுள்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.