அறிக்கை வெளி­வந்­ததும் அடுத்­த­ கட்ட நட­வ­டிக்கை

197 0

மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்­னரே அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து தீர்­மா­னிக்­கப்­படும் என கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்பில் இன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்ள கூட்டு எதி­ர­ணியின் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் ஆலோ­சிக்­கப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. மேலும் குறிப்­பி­டு­கையில்,

மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை இது­வரை மக்­க­ளுக்கு வெ ளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அந்த அறிக்கை மக்­க­ளுக்கு வெ ளிப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் நாம் அது தொடர்பில் தீர்­மானம் எடுப்போம்.

விசே­ட­மாக இந்த அறிக்­கையை உட­ன­டி­யாக பகி­ரங்­கப்­ப­டுத்­து­மாறு நாம் கோரி­யி­ருக்­கிறோம். அதன்­படி விரைந்து இந்த அறிக்கை வெ ளியி­டப்­படும் என நம்­பு­கிறோம். அந்த அறிக்கை வெ ளியி­டப்­பட்­டதும் அது தொடர்பில் ஆராய்ந்­து­விட்டு அதனை மக்­க­ளுக்கு வெ ளிப்­ப­டுத்­துவோம்.

மேலும் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரேரணை தொடர்பில் இன்றைய தினம் கூடவுள்ள கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படும் என்றார்

Leave a comment