வியாழன், வெள்ளியில் விசேட பாரா­ளு­மன்ற அமர்வு!

338 0
 

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­காரம் குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில் விசா­ரிக்கும் நோக்கில் பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை அல்­லது வெள்ளிக் ­கி­ழமை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வினால் கூட்­டப்­படும் என தெரி­ய­வ­ரு­கி­றது.

விசேட பாரா­ளு­மன்ற அமர்வைக் கூட்டி இது தொடர்பில் ஆராய்­வ­தற்­காக விசேட கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தை சபா­நா­யகர் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை நடத்­த­வி­ருக்­கிறார்.

எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை சபா­நா­யகர் தலை­மையில் பாரா­ளு­மன்றில் நடை­பெ­ற­வுள்ள இந்­தக்­கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளு­மாறு அனைத்துக் கட்­சி­க­ளி­னதும் செய­லா­ளர்­க­ளுக்கு சபா­நா­யகர் அழைப்பு விடுத்­தி­ருக்­கிறார்.

அதன்­படி நாளை மறு­தினம் நடை­பெறும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் விசேட பாரா­ளு­மன்ற அமர்வை நடத்தி அதில் பிணை­முறி விவ­காரம் குறித்த விவா­தத்தை நடத்­து­வது தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இதன்­படி எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை அல்­லது வெ ள்ளிக்­கி­ழமை தினத்தில் இந்த விசேட பாரா­ளு­மன்ற அமர்வை நடத்துவதற்கு சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகிறது.

Leave a comment