இலங்கை பேஸ்புக் பயனாளிகளின் கணக்கு முடக்கம்

1501 0

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3000 இலங்கையர்களின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போலி கணக்குகளை வைத்திருத்தல், பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடம் பேஸ்புக் தொட​ர்பாக 3400 முறைபாடுகள் கிடைத்தமையை அடுத்து இதுதொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு தெளிவுப்படுத்தியதால் நிறுவனம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவின் பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ள​ர்.

Leave a comment