கட்சியை தாரைவார்க்க வேண்டாம்- டிலானுக்கு துமிந்த அறிவுறுத்தல்

502 0

இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ள கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே அன்றி கட்சியினுடையது அல்லவெனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எவரும் தாரைவார்க்க வேண்டாம் எனவும் ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தெஹிஅத்தகண்டி மற்றும் பதியதலாவ ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீ ல.சு.க.யினால் முன்வைத்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதனால், அப்பிரதேசங்களிலுள்ள வாக்காளர்கள் தமது வாக்குகளை மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்து கருத்துக் கூறுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்தவொரு கொடுக்கல் வாங்கலும் கிடையாது எனவும் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனு தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment