நான்கு மணி நேரத்தில் 1874 பேர் கைது

538 0

நாட­ளா­விய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளையும் ஒன்­றி­ணை த்து முன்­னெ­டுக்­கப்­பட்ட நான்கு மணி நேர விஷேட குற்ற நிவா­ரண நட­வ­டிக்­கையின் போது 1874 பேரை சந்­தே­கத்தின் பேரில் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். விஷேட சோதனை மற்றும் சுற்­றி­வ­ளைப்­புக்­களை முன்­னெ­டுத்து இவர்­களைக் கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

நேற்று முன் தினம் அதி­காலை 1.00 மணி முதல் 5.00 மணி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் இந்த விஷேட சுற்றி வளைப்­புக்கள் நாட­ளா­விய ரீதியில் ஒரே நேரத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமை­வாக அந்த மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­களின் நெரடி மேற்­பார்­வையில் இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இதன்­போது 14706 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் 10 பொலிஸ் மோப்ப நாய்­களும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது.

இந்த திடீர் நட­வ­டிக்­கையின் போது,  குடி­போ­தையில் வாகனம் செலுத்­திய 501 பேரும்,  பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட 559 பேரும் பல்­வேறு குற்­றங்கள் தொடர்பில் சந்­தே­கத்தில் 722 பேரும், குற்­றங்கள் தொடர்பில் பொலி­ஸா­ரினால் தேடப்ப்ட்டு வந்த 92 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதன்­போது போக்­கு­வ­ரத்து தொடர்பில் 4472 வழக்­கு­களை பொலிஸார் பதிவு செய்­துள்­ளனர். அத்­துடன் 6 சட்ட விரோத துப்­பாக்­கி­க­ளையும் 24.278 கிராம் ஹெரோயின் போதைப் பொரு­ளையும் 8.522 கிராம் கஞ்­சா­வையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.  இதனைவிட 26329 சட்ட விரோத  மதுசார லீற்றர்களும் வேறு மதுசார் வகைகளைச் சேர்ந்த 4309 லீற்றர்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a comment