சிறு கட்­சி­க­ளி­டம் மக்கள் சிறைக் கைதி­க­ளாக இருந்­து­வ­ரு­கின்­ற­னர்!

224 0

பெரும் அர­சி­யல் கட்­சி­க­ளை­விட, சிறு­அ­ர­சி­யல் கட்­சி­கள் இனங்­க­ளை­யும், மதங்­க­ளை­யும் மையப்­ப­டுத்­தியே செயற்­பட்­டுக் கொள்­கின்­றன. இந்த இரண்­டை­யும் முன்­னி­லைப்­ப ­டுத்­தா­விட்­டால், சிறு கட்­சி­க­ளுக்கு விமோ­ச­னம் கிடை­யாது. பொது­மக்­கள் விரும்­பியோ, விரும்­பா­மலோ சிறு கட்­சி­க­ளி­டம் சிறைக் கைதி­க­ளாக இருந்­து­வ­ரு­கின்­ற­னர்.

இவ்­வாறு போக்­கு­வ­ரத்து அமைச்­சர் நிமால் சிறிபால டி சில்வா தெரி­வித்­தார்.

நிதி, வெகு­ஜன ஊடக அமைச்சு மற்­றும் இலங்­கைப் பத்­தி­ரி­கைப் பேரவை இணைந்து பது­ளை­யில் நேற்று ஊட­க­வி­ய­லா­ளர் பயிற்­சிப் பட்­டறை ஒன்றை நடத்­தி­ன. இந்த நிகழ்­வில் அமைச்­சர் நிமால் சிறி­பால டி சில்வா முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­யாற்­று­ கை­யில் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தற்­போ­தை­ய­ஆட்­சி­யில், நான் தொங்­கிக் கொண்­டி­ருப்­ப­தால் தான், ஊவா வெல்­லஸ பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஊட­கத்­து­றை­யை முன்­னின்று நடத்த முடி­யா­மல் போய்­விட்­டது. எமது கட்­சி­ஆட்­சி­அ­மைந்­தி­ருக்­கு­மே­யா­னால், மேற்­கண்ட எனது வேலைத்­திட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பேன்.

சமூ­கங்­க­ளி­டை­யே­ நல்­லி­ணக்­கம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­ய­து கா­லத்­தின் அவ­சி­ய­மா­கும். இதனை அரச தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன துரி­த­மாக முன்­னெ­டுத்து வரு­கின்­றார்.

வாகன விபத்­தொன்று ஏற்­பட்­டா­ல் விபத்­தில் காயப்­பட்­ட­வர் ஒரு இன­மா­க­வும், விபத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர் ஒரு இன­மா­க­வும் இருப்­பா­ரே­யா­னால், விபத்­தில் காயப்­பட்ட இனத்­தைச் சேர்ந்­த­வர்­கள் குறிப்­பிட்­ட­வா­க­ னத்தை தீ வைப்­பது, அவ­ரது உட­மை­களைச் சேதப்­ப­டுத்­துவது, தாக்­கு­வ­தால் இன முறு­கல்­கள், மத­மு­று­கல்­கள் ஏற்­பட்டு இன மற்­றும் மத­வா­தி­க­ளால் பெரும் பதட்­ட­மும், பீதி­யும் ஏற்­பட்டு, நாட்­டில் அமை­தி­யற்ற சூழல் ஏற்­பட்­டு­வ­ரு­கின்­றது.

இது போன்று சிறு­சிறு சம்­ப­வங்­கள் ஊதிப் பெருப்­பிக்­கப்­ப­டு­கின்­றன. இத­னால் பெரும் அழிவை எமது நாடு எதிர்­நோக்குகிறது. தமிழ், சிங்­கள, முஸ்­லிம் பாட­சா­லை­க­ளி­லும் மாண­வர்­கள் மத்­தி­யி­ல் ஆங்­காங்கே இவ்­வா­றான சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுக் கொண்­டு­தான் இருக்­கின்­றன.

இது­போன்ற நிலை தொடர்­வ­தற்கு அனு­ம­திக்­கக்­கூ­டாது. இந்த விட­யத்­தில் ஊட­க­வி­ய­லா­ளர் பொறுப்­பு­டன் செயற்­ப­டல் வேண்­டும். தேசி­ய­நல்­லி­ணக்­கம், தேசிய சக­வாழ்வு ஆகி­ய­வற்­றை­முன்­னி­லைப்­ப­டுத்­திச் செயற்­பட வேண்­டி­யது காலத்­தின் அவ­சிய தேவை.

எமது நாடு சுதந்­தி­ர­ம­டை­யும் வேளை­யில் அனைத்து இனங்­க­ளும் ஒன்­று­பட்ட வகை­யி­லேயே செயற்­பட்­ட­னர். ஆனால், காலப்­போக்­கில், பிரி­வி­னை­கள், பிள­வு­கள், முறு­கல்­கள் ஏற்­ப­டத் தொடங்­கின. தற்­போ­தும் நீறு­பூத்­த­நெ­ருப்­பாக இருக்­கும் நிலையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­க­வேண்­டும்.

தேசிய நல்­லி­ணக்­கம், தேசிய சக­வாழ்வு இந்­நாட்­டில் உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும். “கொசிப் ஜென­லி­சம்”­என்ற ஊடக கலா­சா­ரத்­தி­லி­ருந்து ஊட­க­வி­ய­லா­ளர்­கள் விடு­ப­டல் வேண்­டும்”­ என்­றார்.

Leave a comment