விடுதலைப்புலிகளில் சிலர் பாதுகாப்பு அமைச்சுக்கு பணம்கொடுத்து தப்பிச் சென்றனராம்

312 0

636516544Untitled-12009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு பணம் கொடுத்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பிலான வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் பலர் இவ்வாறு வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றதாகவும், அவர்களின் விபரங்களும் காணாமல்போனோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் குறித்தும் ஆராய்வதற்கு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தில் இடமுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அலுவலகம் தொடர்பாக சிலர் மக்களுக்கு தவறான கருத்துக்களை வழங்கியுள்ளதாகவும், சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்ட சில திருத்தங்களையும் அதில் உள்ளடக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிர்மானிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு நீதிமன்றத்துக்கான அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் அதன் பரிந்துரைகள் இலங்கை சட்டத்தின் படியே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.