லிபிய கடற்பரப்புக்கு அருகில் சுமார் 6 ஆயிரத்து 500க்கும் அதிகமான அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் கடற்பாதுகாப்பு அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
சுமார் 40 படகுகளில் வந்த அவர்கள் குறித்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எரிட்டேரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
லிபியாவில் நிலவும் அரசியல் நிலையற்றத் தன்மை, ஆட்கடத்தல்களுக்கான கேந்திரநிலையமாக அதனைமாற்றி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

