முன்னர் பிரச்சினைகளை தீர்த்த ஆலயங்களே இன்று பிரச்சினைகளின் மையப்புள்ளி -ஊர்காவற்றுறை நீதவான் வை.எம்.எம்.ரியால்-

391 0

ஊர்காவற்றுறை-நீதிமன்றம்கடந்த காலங்களில் ஊரில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடமாற இருந்த ஆலயங்களை மையமாக வைத்து இப்போதுள்ள ஊர் மக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள் என்று ஊர்காவற்றுஐற நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் கவலை வெளியிட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட ஆலயம் ஒன்றின் பரிபாலனசபையினருக்கும், ஆலைய குருக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பான வழக்கு ஒன்று நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது இவ்வழக்கின் எதிரிகள் சார்பில் மன்றில் தோன்றியிருந்த சட்டத்தரணி ரஞ்சித்குமார் குறித்த ஆலயத்தின் கோபுர வாசல் கதவின் திறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்பகுதி கிராம சேவகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆலயத்தின் தெற்கு வீதி வாசல் தகவின் திறப்பு ஆலய பூசகரிடம் உள்ளது. எனவே தெற்கு வாசல் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் அவர்கள் அங்குள்ள நகை, பொருட்களை திருடிச் செல்கின்றார்கள்.
எனவே ஆலயத்தின் தெற்க வாசல் திருப்பிறப்பினையும் அவர்களிடம் இருந்து மீட்டு, ஆலயத்தின் பொருட்களை பாதுகாக்க ஆவணை செய்யுமாறு மன்றில் கோரியிருந்தார்.
இவருடைய கோரிக்கை தொடர்பாக ஆட்சேபணை தெரிவித்த சட்டத்தரணி க.சுகாஸ் அவ்வாறான உத்தரவினை மன்று வழங்கக் கூடாது என்றும், அதற்க தாங்கள் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்றும் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
இரு சட்டத்தரணிகளுடைய வாதங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதவான்:- இவ்வழக்கு என்பது சமூகத்தில் குளப்பங்களை ஏற்படுத்தாதவாறு விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரமே இம் மன்றுக்கு உள்ளது. எனவே அது தொடர்பான சமர்பனங்களை சட்டத்தரணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் முன்னைய காலங்களில் ஊர் மக்களிடையே எதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவ்வூரில் உள்ள ஆலயங்களில் அனைவரும் ஒன்று கூடி அந்த பிரச்சினைக்காக தீர்வினை காண்பார்கள். அதுதான் அந்த காலத்து மக்களுடைய வழமையான செயற்பாடாக இருந்தது.
இந்த செயற்பாடுகள் மூலம் அவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வினையும் எட்டியிருந்தனர். இந் நடமுறைகளை தழுவியே சினிமாக்களும் எடுக்கப்பட்டது.
ஆனால் இன்று அந்த காலங்களில் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இடமாக கருதப்பட்ட ஆலயத்தில் ஈருந்தே ஊர் மக்களுக்கு இடையில் பிரச்சினைகள் எழுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றார்.