சிங்­கள பௌத்த நாடு என்று அழைக்­கப்­ப­டு­வதை எவ­ரும் எதிர்க்க முடி­யாது!

252 0

எமது நாடா­னது சிங்­கள பௌத்த நாடு என்று அழைக்­கப்­ப­டு­வதை எவ­ரும் எதிர்க்க முடி­யாது. இந்த நாட்­டில் 74 சத­வீ­த­மான சிங்­க­ள­வர்­க­ளாகவும் இவர்­க­ளில் 85 சத­வீ­த­மா­ன­வர்­கள் பௌத்­தர்­க­ளா­க­வும் உள்­ள­னர். இதுவே உண்­மை­யான நிலைப்­பா­டா­கும்.

இவ்­வாறு மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக் காலத்­தில் பிர­தி­ய­மைச்­ச­ராக இருந்த றியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர தெரி­வித்­தார்.

கொழும்பு ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இந்த நாட்­டின் மூலப் பெயர் சிங்­கலே என்­ப­தா­கும். 1815ஆம் ஆண்டு பிரித்­தா­னி­யத் தலை­வர்­க­ளா­லும் சிங்­கலே தலை­வர்­க­ளா­லும் கண்­டிய சாச­னம் எழு­தப்­பட்­டது. எமது நாடு சுதந்­தி­ரம் பெற்ற பின்­னர் சிங்­கலே என்ற பெய­ரைத் தொடர்ந்­தும் நாம் பயன்­படுத்­தி­யி­ருந்­தால் இந்த நாட்­டி­லுள்ள அனை­வ­ரும் சிங்­க­ள­வர்­க­ளா­கவே இருந்­தி­ருப்­பார்­கள்.

உல­கி­லுள்ள அனைத்து நாடு­க­ளும் பல்­லி­னங்­க­ளைக் கொண்ட நாடு­க­ளா­கவே உள்­ளன. ஆனால் பொது­வாக நாடு­க­ளில் உள்ள பெரும்­பான்மை சமூ­கத்­தி­னர் மற்­றும் பெரும்­பான்மை மதங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டே அந்­தந்த நாடு­கள் அடை­யா­ளம் காணப்­ப­டு­கின்­றன.

எமது நாடா­னது சிங்­கள பௌத்த நாடு என்று அழைக்­கப்­ப­டு­வதை எவ­ரும் எதிர்க்க முடி­யாது. ஏனெ­னில் இந்த நாட்­டில் 74 சத­வீ­த­மான சிங்­க­ள­வர்­களாவும் இவர்­க­ளில் 85 சத­வீ­த­மா­ன­வர்­கள் பௌத்­தர்­க­ளா­க­வும் உள்­ள­னர். இதுவே உண்­மை­யான நிலைப்­பா­டா­ கும்.

சிங்­க­ள­வர்­கள் வடக்­கில் குடி­யே­று­வதை வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ரன் விரும்­ப­வில்லை. யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள புத்­தர் சிலை­களை அகற்­று­மா­றும் முத­ல­மைச்­சர் கோரிக்கை விடுத்­தார். ஆனால் கொழும்­பி­லுள்ள சிங்­க­ள­வர்­கள் மத்­தி­யில் தமி­ழர்­கள் மிக­வும் மகிழ்ச்­சி­யாக வாழ்­கின்­ற­னர். ஏனெ­னில் இது சிங்­கள பௌத்த நாடா­கும்.

முஸ்­லிம் நாடொன்­றில் வாழும் முல்­லாக் ­களை முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் இவ்­வாறு துன்­பப்­ப­டுத்­தி­னால், அவ­ரது தலை துண்­டிக்­கப்­ப­டும்.

இது சிங்­கள பௌத்த நாடு என்­பதை விக்­னேஸ்­வ­ரன் அறிந்­துள்­ள­தால்தான் அவர் தனது அதி­ருப்­தி­களை வெளி­யிட்டு வரு­கி­றார்.பௌத்­தர்­கள் ஏனைய மதங்­களை மதிக்­கின்­ற­னர்.

இதன் கார­ண­மா­கவே இந்த நாட்­டில் பல ஆயி­ரக்­க­ணக்­கான கோயில் ­கள், தேவா­ல­யங்­கள் மற்­றும் பள்­ளி­வா­சல்­கள் போன்­றன அமைக்­கப்­பட்­டுள்­ளன.

வெசாக் போயா தினத்தைப் பன்­னாட்டு விடு­முறை தின­மாக அறி­விக்­கு­மாறு ஜெனி­வா­வில் வைத்து லக்ஸ்­மன் கதிர்­கா­மர் பரிந்­துரை செய்­தி­ருந்­தார். இதுவே உண்­மை­யான நல்­லி­ணக்­க­மா­கக் காணப்­பட்­டது.

வன­வ­ளத்­தி­ணைக்­க­ளத்­தின் பிடி­யில் கல்­ம­டுப் பிர­தேச மேய்ச்­சல் நிலம் ஆனால் இன்று இந்த நல்­லி­ணக்­கத்தை விக்­னேஸ்­வ­ரன் போன்­ற­வர்­கள் அழிக்க முயற்­சிக்­கி­றார்­கள் என்­றார்.

Leave a comment