கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு

239 0
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அந்தக் கட்சியின் செயலாளர் ஆர். துரைராஜாசிங்கம், முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர்  சுகிர்தன், ரெலோ கட்சியின் செயலாளர் நா. சிறிகாந்தா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பிரசன்னா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோராதலிங்கம் புளொட் கட்சியின் மூத்த உறுப்பினரும் வடக்கு மாகாண அமைச்சருமான க.சிவநேசன் பங்கேற்கின்றனர்.
எனினும் ஈபிஆர்எல்எப்பின் வரதராஜப்பருமாள் அணிக்கு அழைப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் ஈபிஆர்எல்எப் வரதராஜாப்பருமாள் அணி 4 வேட்பாளர்களைக் களமிறக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளரும் முஸ்லிம் சமூக செயற்பாட்டாளருமான வர்த்தகர் ஒருவர் வேட்பாளராகக் களமிறக்க வரதர் அணி முயற்சித்து வருகிறது.

Leave a comment