களுபோவில் போதனா வைத்தியசாலையில் பெண் நோயாளி ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் – சுகாதார அமைச்சர் விசாரணைக்கு உத்தரவு

321 0

hospitalகளுபோவில் போதனா வைத்தியசாலையில் பெண் நோயாளி ஒருவர் மீது பாலியல்  துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தனவுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

21 வயதான இந்த பெண், மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது வைத்தியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த  பெண் தமது காதலனால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கையை மேற்கொள்ளும் வகையிலேயே மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது வைத்தியரால் அவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கொஹூவல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.