அமெரிக்க தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாத வீரர்

335 0
arrives at the ESPN's BODY at ESPY's Pre-Party at Lure on July 15, 2014 in Hollywood, California.
அமெரிக்காவில் என்.எப்.எல் வீரர் ஒருவர் தேசிய கீதத்திற்கு மரியாதை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

சான் பிரான்ஸிஸ்கோ கழகம் ஒன்றின் Colin Kaepernick  என்ற வீரரே இவ்வாறு தேசிய கீதத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்து இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மனிதர்கள் நிறத்தின் அடிப்படையில் ஒடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான ஓர் நிலையில் அமெரிக்க தேசிய கீதத்தை மதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.